Breaking News

மதுரையில் ஹிஜாபை அகற்றச் சொன்ன பாஜக பூத் ஏஜண்ட் கைது.. 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..

அட்மின் மீடியா
0

மதுரை மாவட்டம் மேலூரில் வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்ணை ஹிஜாபை அகற்றச்சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜக பூத் ஏஜெண்ட் கைது செய்யப்பட்டுள்ளார். 


மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சிக்கு உட்பட்ட 8-வது வார்டு அல்அமீன் பள்ளி வாக்குச்சாவடியில் இஸ்லாமிய பெண் ஒருவர் வாக்களிக்க வந்தார். ஹிஜாப் அணிந்து வந்த அந்தப் பெண்ணிடம் , அங்கிருந்த பா.ஜ.க. பூத் ஏஜெண்ட் கிரிராஜன், ஹிஜாப்பை அகற்றிவிட்டு வாக்களிக்குமாறு தெரிவித்து வாக்குவாதம் செய்தார். அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் பாஜக பூத் ஏஜண்ட் கிரிராஜனின் கருத்துக்கு அங்கிருந்த  தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட பிற கட்சி வாக்குச்சாவடி முகவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். 

இதனையடுத்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பா.ஜ.க பூத் ஏஜெண்ட் கிரிராஜன் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் தற்போது கிரிராஜன் மீது மதத்தின் உணர்வை புண்படுத்துதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கிரிராஜனை கைது செய்த போலீஸார்  கிரி ராஜனை நீதிபதி முன் ஆஜர்படுத்தினார்கள்  மார்ச் 4ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback