Breaking News

செங்குத்து மலையின் நடுவில் சிக்கி கொண்ட இளைஞர்.... 28 மணி நேரத்திற்க்கும் மேலாக தொடரும் மீட்பு பணி

அட்மின் மீடியா
0

கேரளாவின் மலம்புலா மாவட்டத்தை சேர்ந்த  பாபு என்ற இளைஞர் அவரது நண்பர்களுடன் சேர்ந்து குரும்பாச்சி மலைக்கு டிரக்கிங் சென்றுள்ளார். அப்போது மலையில் தவறி விழுந்த பாபு, செங்குத்து பாறை ஒன்றின் குகைக்குள் சென்று சிக்கிக்கொண்டார். 


உடனடியாக அவரது நண்பர்கள் அவரை மீட்க குச்சி, கயிறு உள்ளிட்டவைகளைக் கொண்டு  எடுத்த முயற்சி தோல்வி அடைந்தது. அதனை தொடர்ந்து அவர்கள், காவல்துறையிடம் தகவல் கொடுத்துள்ளனர்.`

இதனையடுத்து அங்கு வந்த தீயணைப்புத்துறையினர் இளைஞரை மீட்க, எடுத்த முயற்சியும் பலனளிக்கவில்லை. இந்திய ராணுவத்தின் உதவியை அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கோரினார். இதனடிப்படையில் ராணுவத்தினர் மீட்பு பணிக்காக விரைந்துள்ளனர். 

வீடியோ பார்க்க:-

https://twitter.com/dramadhikari/status/1491059961891528708


Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback