நகைக்கடன் தள்ளுபடி.. 25 ம்தேதிமுதல் நகைகள் திருப்பி வழங்கப்படும்.. அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு
இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை அடமானம் வைத்து பெறப்பட்டுள்ள நடைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், வருகிற 25 ஆம் தேதி முதல் நகை உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்திருக்கிறார்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர் சக்கரபாணி, கூட்டுறவு வங்கிகளில் வைக்கப்பட்ட 5 சவரன் வரை அடமானம் வைத்து பெறப்பட்ட, 6 ஆயிரம் கோடி நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன.கிராமப்பகுதிகளில் தற்போது அடகு வைத்த நகைகள் திருப்பி வழங்கப்பட்டு வருகின்றன. நகர்ப்புற பகுதிகளில் தேர்தல் விதிகளில் விலக்கிக்கொள்ளப்பட்ட பின்னர் பிப்ரவரி 25ம் தேதி முதல் அடகு வைக்கப்பட்ட நகைகள் உரியவர்களிடம் திருப்பி ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
Tags: தமிழக செய்திகள்