Breaking News

உக்ரைன் மீது 2வது நளாக தொடரும் தாக்குதல் முதல்நாள் போரில் 137 மரணம்......குண்டு மழை பொழியும் ரஷ்யா வீடியோ:

அட்மின் மீடியா
0

உக்ரைன் மீது முழு வீச்சில் தாக்குதல் தொடங்கப்படும் என  அதிபர் புதின் நேற்று அறிவித்திருந்தார். ஒரே நாளில் வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யா  உக்ரைன் பகுதிகள் முழுவதிலும் வெடி குண்டுகள் மழை பொழிகிறது என்றே சொல்லலாம். உக்ரைனில் உள்ள . ஆயுதக்கிடங்கு, ராணுவத் தளவாட நிலையம், இராணுவ பயிற்சி மையங்கள், விமான தளங்கள் போன்றவற்றை ரஷ்யா அழிக்க தொடங்கியுள்ளது..உக்ரைனில் பல இடங்களை ரஷ்யா கைப்பற்றி உள்ளது.



உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போரின் முதல் நாள் நிலவரப்படி, ரஷ்யா 200க்கும் மேற்பட்ட இடங்களில் தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது,  ரஷிய ராணுவ வீரர்கள் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல் காரணமாக இதுவரை நூறுக்கும் அதிகமான உக்ரேனியர்கள் உயிரிழந்தனர். 300-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். முதல் நாள் சண்டையில் 137 பேர் உயிரிழந்ததாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைனில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.உக்ரைன் ​மீதான ரஷியாவின் போர் 2-வது நாளாக தொடர்கிறது.தேநேரம் போர் தொடர்வதால், பீதியில் உறைந்துள்ள மக்கள் மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்பட பல்வேறு இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில் உக்ரைனைச் சேர்ந்த 18 - 60 வயது ஆண்கள் நாட்டை விட்டு வெளியேற அரசு தடை விதித்துள்ளது. அத்துடன் ரஷ்ய படையை எதிர்த்து உக்ரைன் ராணுவத்துக்கு துணையாக நிற்க 10 ஆயிரம் தானியங்கி இயந்திர துப்பாக்கிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம் கட்டாய ராணுவ சேவையை உக்ரைன் அரசு அமல்படுத்தியுள்ளது.

போரால் பாதிக்கப்பட்டிருக்கும் உக்ரைன் நாட்டின் உடனடி தேவைகளுக்காக உலக வங்கியும், அதன் அமைப்புகளும் நிதியுதவி வழங்க முடிவு செய்திருப்பதாக உலக வங்கியின் தலைவர் டேவிட் மால்பஸ் விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் ஏற்கனவே ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க தொடங்கி உள்ளன.மேலும் உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கியிருக்கும் நிலையில், ரஷ்யாவிடம் சரண் அடைய மாட்டோம் என உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீதான தாக்குதலை ரஷியா உடனடியாக நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

இநிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ரஷிய அதிபர் புதினுடன் நேற்று தொலைபேசியில் பேசினார். அப்போது அவர் போரை கைவிட்டு அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முன்வருமாறு கோரிக்கை விடுத்தார்.

அதேசமயம் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் 5,000 தமிழ் மாணவர்களை பத்திரமாக நாட்டுக்கு அழைத்து வர சிறப்பு விமானங்களை அனுப்பி மீட்பு நடவடிக்கையை எடுக்குமாறு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.


குண்டு மழை பொழியும் ரஷ்யா வீடியோ:

https://twitter.com/asianewsteam/status/1496870913568313344

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback