Breaking News

குறைந்து வரும் கொரானா ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்.. 14 ம் தேதி முதலமைச்சர் ஆலோசனை...

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா 3வது அலை மற்றும் ஒமைக்ரான் பரவல் வேகமாக அதிகரிக்கத்தொடங்கியது இதனால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.


 

இந்த கட்டுப்பாடுகளின் பலனாக ஜனவரி மாத இறுதியில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியது. இதனால் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. 

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக வெகுவாக குறைந்து வருகிறது.இந்நிலையில் ஏற்கனவே நீட்டிக்கப்பட்டு தற்போது அமலில் உள்ள கொரோனா கட்டுப்பாடுகள் வரும் 15 ஆம் தேதியுடன் முடிய உள்ளன.ஆகையால் கூடுதல் தளர்வுகள் விதிப்பது, கொரோனா தொற்று பரவல் அதிகரிக்காமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து வரும் 14 ஆம் தேதி, முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவத்துறை நிபுணர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback