குடும்ப கட்டுப்பாடு செய்தும் மீண்டும் கர்ப்பம்...மாதம் 10,000 ஆயிரம் இழப்பீடு தர உயர்நீதிமன்றம் உத்தரவு!!
குடும்ப கட்டுப்பாடுக்குப் பின் பிறந்த குழந்தை- மாதம் 10,000 ஆயிரம் இழப்பீடு தர உயர்நீதிமன்றம் உத்தரவு!!
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியைச் சேர்ந்த தனம் என்பவருக்கு 2 பெண் குழந்தை உள்ள நிலையில் கடந்த 2014ம் ஆண்டு கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 2014 ம் ஆண்டு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.அறுவை சிகிச்சைக்கு பின் தனம் மீண்டும் கருவுற்றார். அவரை பரிசோதித்த அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர்கள், குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை தோல்வியடைந்துவிட்டதாக அறிக்கை தந்துள்ளனர்.மேலும் தனம் அவர்களுக்கு 3வதாக பெண்குழந்தை பிறந்துள்ளது
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்த தனம் முறையான அறுவை சிகிச்சை செய்யாததால் தான் மீண்டும் கர்பம் அடைந்ததாகவும் இதனால் தனக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரி வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்குப் பின் மீண்டும் கர்ப்பம் தரிக்காது என முழுமையாக நம்பிய நிலையில், மீண்டும் கருவுற்ற மனுதாரருக்கு இழப்பீடு பெற உரிமை உண்டு என கூறி, மூன்றாவது பெண் குழந்தைக்கு 21 வயது வரை அல்லது பட்டப்படிப்பு வரையிலோ கல்வி கட்டணம், பாடபுத்தகங்கள், எழுதுபொருட்கள் ஆகியவற்றுக்காக மாதம் 10 ஆயிரம் ரூபாய் வீதம் ஆண்டுக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், மனுதாரரின் 3-வது குழந்தையையும் பெண் குழந்தைகளுக்கான திட்டத்தில் அரசு சேர்க்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்
Tags: தமிழக செய்திகள்