Breaking News

BREAKING: 31 ம் தேதி வரை கொரோனா கட்டுப்பாடுகள் நீட்டிப்பு ...என்ன என்ன கட்டுப்பாடுகள் ....முழு விவரம்...

அட்மின் மீடியா
0

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரானா பரவலை தடுக்க தமிழகத்தில் ஜனவரி 31-ஆம் தேதி கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்

 


தமிழகத்தில் இன்றுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவடைய உள்ள நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் முக.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பாதிப்பு அதிகரிப்பு காரணமாக தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் ஜனவரி 31-ஆம் தேதி வரை கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

புதிய கட்டுப்பாடுகள் என்ன:

ஜனவரி 31-ஆம் தேதி வரை இரவுநேர ஊரடங்கு நீடிக்கப்படுகிறது. 

ஜன.14-ஆம் தேதி முதல் 18 வரை அனைத்து வழிபாட்டு தளங்களிலும் மக்களுக்கு அனுமதி இல்லை. 

பொங்கல், தைப்பூசம் நாட்களில் கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. 

வரும் 16-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முழு பொதுமுடக்கம் அமல்

பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்லும் பொதுமக்கள் நலன் கருதி பொது பேருந்துகளில் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் 75% மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். 

மேலும் தற்போது, ஊரடங்கு களங்களில் தடை செய்யப்பட்ட மற்றும் அனுமதிக்கப்பட்ட இதர செயல்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும். 


தமிழக அரசு அறிவிப்பு முழு விவரம்...

https://drive.google.com/file/d/1GDgSiaeaq0nK0Oh-EJ1ESwR5fKdaF9E_/view?usp=sharing

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback