Breaking News

வாட்ஸ்அப்பில் புது அம்சம் இனி யார் மெசேஜ் அனுப்பினாலும் க்ரூப் அட்மின் டெலிட் செய்யலாம்!

அட்மின் மீடியா
0

தகவல் தொழில்நுட்ப செயலிகளில் அதிக அளவிலான வாடிக்கையாளர்களை பெற்று முண்ணனியில் இருப்பது  ஃபேஸ்புக் நிறுவனத்தின் கீழ் இயங்கும் வாட்ஸ் அப்தான் வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களின் தேவையை அறிந்து பல்வேறு புதுப்புது அம்சங்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. 



அதன்படி சமீபத்திய அம்சமாக அட்மின்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

வாட்ஸப் குருப்பில் வரும் மெசேஜ்களை நீக்குவதற்கு அதன் அட்மின்களுக்கு அதிகாரம் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. ஒரு குழுவில் யார் மெசேஜ் அனுப்பினாலும் அதை அட்மினால் நீக்க முடியும் என கூறப்படுகிறது. இதனால் குழுவில் உள்ள நபர்கள் தேவையற்ற தகவல்களை குழுவில் பகிர்ந்தால் அதனை அட்மின் நீக்கிவிட முடியும். அச்செய்தி"This was deleted by an admin." என குழு உறுப்பினர்களின் திரையில் தோன்றும்.இந்த அம்சமும் தற்போதுவரை சோதனையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த அம்சங்கள் விரைவில் பயனர்களுக்கு கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback