Breaking News

அரசு மற்றும் தனியாரால் நடத்தப்படும் பொங்கல், கலை விழாக்கள் ஒத்திவைப்பு

அட்மின் மீடியா
0

தமிழ்நாட்டில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் அதிகரிப்பு காரணமாக நாளை முதல் இரவு ஊரடங்கு - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு



கட்டுப்பாடுகள் என்ன என்ன.....

இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமல்

பால், மருத்துவம், பத்திரிக்கை, பாதுகாப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் இரவில் அனுமதி

இரவு ஊரடங்கு நேரத்தில் (இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை) கடைகள், உணவகங்கள், வணிக வளாகங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதி இல்லை

பேருந்து, புறநகர் இரயில்களில் 50% இருக்கைகளுக்கு மட்டும் அனுமதி

பொழுதுபோக்கு, கேளிக்கை பூங்காக்கள் செயல்பட தடை

மருத்துவம் தவிர, அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் ஜனவரி 20ஆம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு



ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு 

வெள்ளி,சனி ஞாயிறு ஆகிய 3 நாட்கள் வழிபாட்டு தலங்களில் மக்களுக்கு அனுமதி இல்லை

பெட்ரோல் பங்குகள் 24 மணி நேரமும் செயல்படும்

உணவகங்களில் 50% வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி

1 முதல் 9ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. 

பொதுத்தேர்வு எழுதுவோரின் எதிர்கால நலன் கருதி, 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும் 

அரசு, தனியார் நிறுவனத்தால் நடத்தப்படும் பொங்கல், கலை நிகழ்வுகள் ஒத்திவைக்கப்படும். 

அனைத்து கடற்கரைகளிலும் நடைபயிற்சிக்கு மட்டுமே அனுமதி 


மேலும் முழு விவரங்களுக்கு:-


https://drive.google.com/file/d/1DpLOTzOFMPOeXeB7TeZrl4lZqWffaowX/view?usp=sharing



Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback