Breaking News

ஞாயிறு முழு ஊரடங்கில் அனுமதிக்கப்பட்டவை என்ன! என்ன! இதோ முழு விவரம்....

அட்மின் மீடியா
0

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின் போது பேருந்து, மெட்ரோ ரயில் சேவைகளுக்கு தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.




ஞாயிறு ஊரடங்கின் போது

  • ஊரடங்கு காலத்தில் பணிக்கு செல்வோர் அலுவலக அடையாள அட்டை மற்றும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும்


  • ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகத்தில்‌ முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும்‌. 


  • அத்தியாவசியப்‌ பணிகளான மருத்துவப்‌ பணிகள்‌, மருந்தகங்கள்‌, பால்‌ விநியோகம்‌, சரக்கு வாகனப்‌ போக்குவரத்து மற்றும்‌ பெட்ரோல்‌ டீசல்‌ பங்குகள்‌ போன்றவை இயங்குவதற்கு அனுமதிக்கப்படும்‌.

  • பொதுப்‌ போக்குவரத்து மற்றும்‌ மெட்ரோ ரயில்‌ ஆகியவை இயங்காது.


  • ஞாயிற்றுக்கிழமைஅன்று முழு ஊரடங்கின்‌ போது, உணவகங்களில்‌ பார்சல்‌ சேவை மட்டும்‌ காலை 7.00 மணி முதல்‌ இரவு 10.00 மணி வரை அனுமதிக்கப்படும்‌. 


  • உணவு டெலிவரி செய்யும்‌ மின்‌ வணிக நிறுவனங்கள்‌ மேற்சொன்ன நேரத்தில்‌ மட்டும்‌ செய்லபட அனுமதிக்கப்படும்‌. இதர மின்‌ வணிக நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை.


  • ஞாயிற்றுக்கிழமை மற்றும்‌ வார நாட்களில்‌ இரவு 10.00 மணி முதல்‌ காலை 5.00 மணி வரை விமானம்‌, இரயில்‌ மற்றும்‌ பேருந்துகளில்‌ பயணிப்பதற்காக விமானம்‌, இரயில்‌ மற்றும்‌ பேருந்து நிலையங்களுக்கு செல்ல சொந்த மற்றும்‌ வாடகை வாகனங்களை பயன்படுத்திக்‌ கொள்ள அனுமதிக்கப்படும்‌. அவ்வாறு பயணிக்கும்‌ போது, பயணச்சீட்டு வைத்து கொள்ள வேண்டும்‌.

Tags: தமிழக செய்திகள்

Share this