Breaking News

கார்ப்ரேட் கம்பெனிகளுக்கு பாடம் எடுக்கும் சென்னை ஆட்டோ ஓட்டுநர், வீடியோ பாருங்க உங்களுக்கே புரியும்

அட்மின் மீடியா
0

சென்னையை சேர்ந்த ஓஎம்.ஆர் பகுதில் ஆட்டோ ஓட்டும் ஓட்டுனர் அண்ணாதுரை உலகில் பெரும் கார்ப்ரேட் கம்பெனிகளுக்கு பாடம் எடுக்கும்  அளவிற்கு உயர்ந்துள்ளார்.அப்படி என்ன தான் செய்தார் வாங்க பார்க்கலாம்




தன் வாடிக்கையாளர்களே தன் எஜமானர் என்பதற்க்காக ஆட்டோவில் ஏற்படுத்திய வசதிகள்

தனது ஆட்டோவில் பயணம் செய்யும் வாடிக்கையாளர்கள் உபயோகிக்க லேப்டாப், மற்றும் ஐபேட்,  வைபை வைத்துள்ளார் 

தனது ஆட்டோவில் பயணம் செய்யும் வாடிக்கையாளர்கள் பொழுதை கழிக்க டீவியும் வைத்துள்ளார்

தனது ஆட்டோவில் பயணம் செய்யும்  வாடிக்கையாளர்கள் படிக்க தினசரி, நியூஸ்பேப்பர், தமிழிலும்,ஆங்கிலத்திலும், மற்றும் வார மாத இதழ்கள் ,தமிழிலும், ஆங்கிலத்திலும் வைத்துள்ளார் 

மேலும் ஆட்டோவில் பயணம் செய்யும் வாடிக்கையாளர்கள் குடிக்க ஆட்டோவில் குட்டி ஃப்ரிட்ஜில் குளிர்ந்த நீர் வைத்துள்ளார் 

மேலும் வாடிக்கையாளர்களுக்கு பசித்தால் உணபதற்க்கு  பிஸ்கட் போன்ற தின்பண்டங்களை தயாராக வைத்துள்ளார்

மழை வெயில் போன்ற நேரத்தில் வாடிக்கையாளர்கள் பயன்படுத்த குடை தயாராக வைத்துள்ளார்.

இது கொரானா காலம் என்பதால் பயணிகளுக்கு இலவச மாஸ்க்கும் தயாராக வைத்துள்ளார்.மேலும் ஆட்டோவில் சானைடைசரும் வைத்துள்ளார்

தனது ஆட்டோவில் பயணம் செய்யும் வாடிக்கையாளர்கள் பணம் தர ஸ்வைப்பிங் மெசின், வைத்துள்ளார், கூகுள்பே, போன் போற டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளும் உண்டு

இதை விட ஆச்சர்யம் அனைத்தும் இலவசமாக தன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றார்

வாடிக்கையாளர்களுக்கு ஆட்டோ  காத்திருந்த நிலை மாறி அண்ணாதுரை  ஆட்டோவுக்கு அவர்கள் காத்திருக்கின்றனர் ஏன் தெரியுமா அண்ணாதுரையின் ஆட்டோவிற்கான கட்டணமும், மற்ற ஆட்டோவில் வசூலிக்கப்படும் அதே அளவிலான கட்டணமே இதற்க்காக கூடுதல் கட்டணம் ஏதும் பெறவில்லை

வாடிக்கையாளர்கள் தான் எஜமானர்கள் என்பதால்தான் பல வசதிகளை செய்து கொடுத்து உள்ளதாக அண்ணாதுரை கூறுகிறார்.

அண்ணாதுரை புகழ் பரவியதை அடுத்து வாடிக்கையாளர் சேவை பற்றி கார்ப்ரேட் நிறுவனங்கள் உங்கள்  அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள வருமாறு பெரிய நிறுவனங்கள் அண்ணாதுரையை அழைக்கின்றன.குறிப்பாக, வோடாஃபோன், ஹுண்டாய், டொயோடா மற்றும் ராயல் என்ஃபீல்டு ஐஐடி மற்றும் ஐஎஸ்பி போன்ற நாட்டின் உயர்ந்த கல்வி நிறுவனங்களுக்குச் சென்றும் தன்னம்பிக்கை உரையாற்றி வருகிறார்.கூகுள் போன்ற நிறுவனங்கள் அவரை அழைத்துள்ளன.

அண்ணாதுரையை பற்றி www.thebetterindia.com ஊடகம் வெளியிட்ட வீடியோவை ஆனந்த் மஹிந்திரா தன் டிவிட்டரில் வெளியிட்டு அவரை புகழ்ந்து தள்ளி இருக்கிறார். 

அண்ணாதுரையிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். இவருடன் எம்பிஏ மாணவர்கள் ஒருநாள் செலவு செய்தால் அது மிகப்பெரிய Customer Experience Management பாடமாக அவர்களுக்கு அமையும். 

இவர் வெறும் ஆட்டோ டிரைவர் கிடையாது.. அவர் மேனேஜ்மேண்ட் பிரிவில் ஒரு பேராசிரியர் என்று ஆனந்த் மஹிந்திரா பாராட்டி இருக்கிறார். 

https://twitter.com/anandmahindra/status/1484899375667163139

Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback