Breaking News

முஸ்லிம் பெண்கள் புகைப்படத்தை ஆப் மூலம் ஏலம்: ஒவைசி,பிரியங்கா சதுர்வேதி, உள்ளிட்ட பலர் கண்டனம்

அட்மின் மீடியா
0

முஸ்லிம் பெண்கள் புகைப்படத்தை பதிவிட்டு ஆப்மூலம்  ஏலம்: ஒவைசி,பிரியங்கா சதுர்வேதி, உள்ளிட்ட பலர் கண்டனம்



Sulli Deals, Bulli Bai ஆப் என்றால் என்ன.....

கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் Sulli Deals என்ற செயலி முடக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் இஸ்லாமிய பெண்களின் புகைப்படங்களை பதிவேற்றி ஏலம் விடும் Bulli Bai என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது

இதில் இஸ்லாமிய பெண்களின் ஆயிரக்கணக்கான புகைப்படங்கள் பதிவேற்றப்பட்டுள்ளது.

இந்த செயலியில் இஸ்லாமிய பெண்களின் புகைப்படம் பதிவேற்றப்படும். அதில் ஒரு நபர் லாக்இன் செய்கிறார் என்றால், அவருக்கு ஒரு இஸ்லாமிய பெண்ணின் புகைப்படம் திரையில் தோன்றும். இவர்தான் உங்களின் சுல்லி.. இவரை ஏலம் விடுங்கள் என்று கேட்கும். அந்த பெண்ணை அதே ஆப்பில் இருக்கும் மற்ற யூசர்களுக்கு இவர் ஏலம் விட வேண்டும். இதுதான் இந்த செயலியின் நோக்கம். ஆனால் இது உண்மையான ஏலம் கிடையாது. 

உண்மையில் இதில் பெண்கள் விற்பனை செய்யப்படவில்லை என்றாலும், இஸ்லாமிய பெண்களை அவமதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த செயலி உருவாக்கப்பட்டது. இஸ்லாமிய பெண்களை அவமதிக்க வேண்டும், அவர்களை இழிபடுத்த வேண்டும் என்ற குறிக்கோளோடு அவர்களின் புகைப்படங்களை குறி வைத்து இந்த Sulli Deals செயலி உருவாக்கப்பட்டது. 

சமூக வலைத்தளங்களில் இஸ்லாமிய பெண்கள் ஷேர் செய்யும் புகைப்படங்களை  எடுத்து  அந்த செயலியில் பதிவேற்றி, ஒவ்வொரு பெண்னுக்கும் ஒவ்வொரு மதிப்பு என்று கூறி ஏலம் விடுவார்கள். 

முஸ்லிம் பெண்களின் புகைப்படத்தை அவர்களின் அனுமதியில்லாமல் பதிவிட்டு அவர்களை ஏலம் விடும் ஆப்ஸ் குறித்து சிவசேனா எம்.பி.பிரியங்கா சதுர்வேதி மும்பை போலீஸில் புகார் செய்துள்ளார்.

பிரியங்கா சதுர்வேதி தன் ட்விட்டரில்

மும்பை போலீஸ் ஆணையர், டிசிபி குற்றவியல் ராஷ்மி கரன்திகர் ஆகியோரிடம் முஸ்லிம் பெண்களை ஏலம் விடும் செயலி குறித்துப் பேசினேன். இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்கள். மகாராஷ்டிரா காவல் டிஜிபியும் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்கக் கேட்டுக்கொள்கிறேன். இந்த பெண் வெறுப்பு இணையத்தை நடத்துவோர் கைது செய்யப்பட வேண்டும்.எனத் தெரிவித்துள்ளார். 

கண்டனம்

முஸ்லிம் பெண்களை அவதூறு செய்யும் வகையில் புகைப்படங்களை அவர்களுக்குத் தெரியாமலேயே பதிவேற்றம் செய்து ஏலம் விடும் அந்த செயலிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி  சிவசேனா எம்பி பிரியங்கா சதுர்வேதி, AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசி, காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட பலர் இந்த செயலிக்கு எதிராக இணையத்தில் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர். 

இந்த விவகாரம் குறித்து மும்பை சைபர் கிரைம் போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். 

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback