தனது மகளுடன் சேர்த்து இலவசமாக 5 பெண்களுக்கு 10 சவரன் போட்டு ஒரே மேடையில் திருமணம் செய்துவைத்த தந்தை!
கேரளாவில் உள்ள கன்னூரில் சலீம் - ரூபினா தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களின் மகள் ரமீசா , சலீம் தனது மகள் ரமிசாவுக்கு வரதட்சணை எதுவும் கேட்காத மாப்பிள்ளையாக தேடிப்பிடித்து திருமணம் செய்து வைக்க முடிவெடுத்துள்ளார்.
அதன்படியே சலீமின் மகள் ரமீசாவுக்கு ஒரு மாப்பிள்ளை கிடைத்துள்ளது. ரமீசாவுடன் சேர்ந்து மேலும் 5 பெண்களுக்கு சலீம் திருமணம் செய்து வைத்துள்ளார்.
மேலும் மகள் திருமணத்தை ஆடம்பரமாக நடத்தாமல் தான் சேமித்து வைத்த பணத்தில் மேலும் ஐந்து பெண்களுக்கு ஒரே நேரத்தில் திருமணம் செய்து வைத்துள்ளார் சலீம்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த 5 பெண்களை தேர்வு செய்து இத்திருமணத்தை சலீம் நடத்தி வைத்துள்ளார்.
6 பேரில் இரண்டு பெண்கள் இந்து பெண்கள் மற்றும் நால்வர் இஸ்லாமியர்கள் ஆவார்கள்.அதன்படி இரண்டு திருமணங்கள் இந்து முறைப்படியும் மூன்று திருமணங்கள் இஸ்லாமிய முறைப்படியும் நடந்தன.
இதனை தொடர்ந்து தன் மகள் உட்பட 6 மணப்பெண்களுக்கும் தலா 10 சவரன் நகையை சலீம் வழங்கினார்,
6 பேருமே ஒரே மாதிரியான புடவையை அணிந்திருந்தனர்.சலீமின் இந்த மனிதநேயமிக்க செயலுக்கு பாராட்டுகள் குவிந்துள்ளது.
SOURCE:-
Tags: இந்திய செய்திகள்