பொங்கல் பரிசுத் தொகுப்பினை ஜன.31ம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம் - தமிழக அரசு
பொங்கல் பரிசுத் தொகுப்பினை ஜன.31ம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவிப்பு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பச்சரிசி, வெல்லம், நெய் உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுவருகின்றது.
இந்நிலையில், தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான தேதியை ஜனவரி 31-ம் தேதி வரை தமிழக அரசு நீட்டித்துள்ளது.
மேலும் ஜனவரி 9-ஆம் தேதி அன்று முழு ஊரடங்கு என்பதால் மக்கள் தங்களுக்கு தெரிவிக்கப்படும் தேதியில் பொங்கல் பரிசுப் பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம்.என்றும் குறிப்பிட்ட நாளில் பொங்கல் பரிசு தொகுப்பினை பெற முடியாவிட்டாலும் பொங்கலுக்கு முன்பாக ரேஷன் கடைகளுக்கு சென்று பெற்றுக் கொள்ளலாம். தவிர்க்க முடியாத காரணத்தால் பொங்கல் தொகுப்பை பெற இயலாதவர்கள் ஜனவரி 31-ம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்