Breaking News

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜன. 17-க்கு மாற்றம் அதிகாரபூர்வ அறிவிப்பு

அட்மின் மீடியா
0

மதுரை அலங்காநல்லூரில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுப் போட்டியை ஜனவரி 16 ஆம் தேதியில் இருந்து ஜனவரி 17 ஆம் தேதிக்கு மாற்றுவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.

 


பொங்கல் விழாவையொட்டி மதுரையில் அரசு சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளது. இதில், அலங்காநல்லூரில் ஜனவரி 16 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஜல்லிக்கட்டு போட்டி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் வருகிற ஜனவரி 16 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளதால் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தேதியை மாற்றுவது குறித்து அலங்காநல்லூர் விழாக் குழுவுடன் மதுரை மாவட்ட ஆட்சியர் இன்று மேற்கொண்டார்.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய மதுரை மாவட்ட ஆட்சியர், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 16ம் தேதிக்கு பதிலாக ஜனவரி 17ம் தேதி நடைபெறும் என்று அறிவித்தார்

Give Us Your Feedback