Breaking News

நீலகிரி மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

அட்மின் மீடியா
0

படுகர் சமுதாய மக்களின் ஹெத்தை அம்மன் திருவிழாவையொட்டி நீலகிரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் எஸ்.பி.அம்ரித் அறிவித்துள்ளார். 

 


ஆண்டுதோறும் ஹெத்தையம்மன் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். அதன்படி திருவிழாவின் முக்கிய நிகழ்வான நாளை ஹெத்தையம்மன் உலா நடைபெறவுள்ளது.

இதனால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் , பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடுசெய்யும் வகையில் ஜன.8ஆம் தேதி சனிக்கிழமை வேலைநாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Share this