ஊரடங்கு நீட்டிப்பு குறித்து நாளை தமிழக முதல்வர் ஆலோசனை
தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்துடன் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது.
இந்நிலையில் ஏற்கனவே அறிவித்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் 15ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர், மருத்துவத்துறை செயலாளர் ,மக்கள் நல்வாழ்வு துறை, வருவாய்த் துறை, உயர் அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
Tags: தமிழக செய்திகள்
