Breaking News

விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டரின் கருப்புப்பெட்டி கண்டுபிடிப்பு

அட்மின் மீடியா
0

குன்னூர் அருகே விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் கறுப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ராணுவ ஹெலிஹாப்டர் குன்னூர் அருகே வானில் பறந்து கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளாகி முழுமையாக எரிந்துள்ளது.

 


சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து வெலிங்க்டனுக்கு சென்ற போது, காட்டேரி என்ற பகுதி அருகில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் பயணித்துள்ளனர்.இந்நிலையில், முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய விமான படை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 

முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடல்கள் இன்று ராணுவ விமானம் மூலம் டெல்லி கொண்டு செல்லப்படுகின்றன. நாளை இறுதி சடங்கு நடைபெறவுள்ளது.இந்நிலையில், குன்னூர் அருகே விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் கறுப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

 

கருப்பு பெட்டி என்றால் என்ன:

 

கறுப்பு பெட்டி என்பது விமானத்தினுள் நடைபெறும் தகவல்களை சேமிக்கப் பயன்படும் ஒரு தொழில்நுட்பக் கருவியாகும். 

விமானம் விபத்திற்குள்ளாகும்போது, அது தொடர்பான காரணங்களை அறிவதற்கும், ஆராய்வதற்கும் இந்த கருவி பெரிதும் உதவும்.இதனை கருப்புப் பெட்டி என்று அழைத்தாலும், இது செம்மஞ்சள் நிறத்தில் காணப்படும். 

இந்த கறுப்பு பெட்டி விமானத்தின் சேதம் குறைவாக ஏற்படும் பின்பகுதியில் இவை பொருத்தப்பட்டிருக்கும்.

கறுப்பு பெட்டியின் ஒரு பகுதி விமான ஒட்டியின் அறையில் நிகழும் உரையாடல்களை பதிவு செய்யும்.மற்றொரு பகுதி விமானத்தின் வேகம், பறக்கும் உயரம், திசை, காலநிலை தகவல் முதலிய விமானத்தின் தொழில்நுட்பத் தகவல்களை பதிவு செய்யும். 

டைட்டானியம் என்ற தனிமத்தால் செய்யப்பட்ட இவை புவிஈர்ப்பு விசையை விட 3 ஆயிரத்து 400 மடங்கு விசையையும், ஆயிரம் டிகிரி செல்சியஸ் வெப்பநிலையையும் தாங்கக் கூடியது.

விமானம் விபத்துக்குள்ளானாலும் கருப்புப் பெட்டியிலிருந்து தொடர்ந்து சிக்னல்கள் வந்து கொண்டிருக்கும். கிட்டத்தட்ட 30 நாட்கள் வரை கறுப்பு பெட்டியில் இருந்து சிக்னல் வரும். 

தண்ணீரில் விழுந்தாலும் தீயில் எரிந்தாலும் இதில் உள்ள தரவுகள் பாதுகாப்பாக இருக்கும். கடலுக்குள் மூழ்கினாலும் மூன்று மாதங்களுக்கு கறுப்பு பெட்டி பழுதடையாது. ஆகாயத்தில் இருந்து வீழ்ந்தாலும் கறுப்பு பெட்டி உடையாது.

Tags: தமிழக செய்திகள்

Share this