ஆவடி பேருந்து நிலையத்தில் ஆக்ரோஷமாக மோதிக் கொண்ட பள்ளி மாணவிகள் -பரபரப்பு வீடியோ !
அட்மின் மீடியா
0
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பேருந்து நிலைய பணிமனையில் 10-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் இரண்டு குழுக்களாக பிரிந்து ஒருவரை ஒருவர் ஆக்ரோஷமாக தாக்கிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆவடி பேருந்து நிலைய பணிமனையில் பள்ளி மாணவ மாணவிகள் ஏராளமானோர் பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது அங்கு கூடியிருந்த மாணவிகள் சிலர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளதுமாணவிகள் இரண்டு குழுக்களாக பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கிகொண்டனர். சண்டையிட்டுக் கொள்ளும் மாணவிகளை பொதுமக்கள் சமாதானம் செய்தாலும் கட்டுப்படுத்த முடியவில்லை.தலைமுடியை பிடித்துக்கொண்டு ஆக்ரோஷமாக மோதிக்கொண்ட காட்சிகளை அங்கிருந்த நபர் ஒருவர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகிறது.
வீடியோ பார்க்க:-
https://twitter.com/RJGovind104/status/1468476231528050691
சென்னை ஆவடி பேருந்து நிறுத்தத்தில் அரசு பள்ளி மாணவிகள் ஆக்ரோஷமாக மோதிக்கொண்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.#Chennai #aavdi #பள்ளிமாணவிகள்மோதல் #ViralVideo pic.twitter.com/tK6PAgH4kf
— M.Govindaraji (@RJGovind104) December 8, 2021
Tags: வைரல் வீடியோ