Breaking News

அரையாண்டு விடுமுறையில் தனியார் பள்ளிகளை திறந்தால் கடும் நடவடிக்கை

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் டிசம்பர் 25ஆம் தேதி முதல் ஜனவரி 2ம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருந்தார் . 

 


அதன்படி மாணவர்கள் தற்போது விடுமுறையில் உள்ளனர். இருப்பினும் தனியார் பள்ளிகள் சில பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்காமல் வகுப்புகள் நடத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் ஜனவரி 2-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் பள்ளிகளை திறந்து வகுப்புகளை நடத்தினால் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback