பிரபல யூடியூபர் மாரிதாஸ் கைது
பிரபல யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் உள்ள அவரது வீட்டில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.
முதுகுளத்தூரைச் சேர்ந்த மணிகண்டன் மரண விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ மற்றும் டுவிட் பதிவிட்டதாக யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்.
மாரிதாஸ் தமிழ்நாடு அரசு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ட்விட்டரில் கருத்து பதிவு செய்துள்ளார். அதனால் அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார் என்று மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த சின்ஹா தெரிவித்திருக்கிறார்.
மேலும் அவரை இன்று மதுரையில் உள்ள வீட்டில் வைத்து போலீசார் கைது செய்ய வந்தபோது, பாஜகவினர் திரண்டு வந்து போலீசாருடன் வாக்குவாதம் செய்து கைது செய்ய விடாமல் தடுத்தனர். பின்னர் போலீசார் அவர்களை அப்புறப்படுத்திவிட்டு கைது செய்தனர்
Tags: தமிழக செய்திகள்