விபத்துக்கு முன் எடுக்கப்பட்ட ராணுவ ஹெலிகாப்டரின் கடைசி நிமிட வீடியோ
நாட்டின் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேருடன் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து வெலிங்டனுக்கு நேற்று சென்ற ராணுவ ஹெலிகாப்டர் குன்னூர் அருகே விபத்துக்குள்ளாகி கீழே விழுந்து முழுமையாக எரிந்தது.இந்த கோர விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளார்கள்
முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேரை ஏற்றிச் சென்ற எம்ஐ-17 ஹெலிகாப்டர் நேற்று குன்னூர் அருகே விழுந்து நொறுங்குவதற்கான இறுதி வீடியோ வெளியாகியுள்ளது.
குன்னுர் காட்டேரி பூங்கா அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த கேரளத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் எடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் , அந்த ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்து சென்று மேக மூட்டத்தில் மறைகிறது. அடுத்த வினாடிகளில் பயங்கர சத்தம் கேட்கிறது.
ஆனாலும் வீடியோவில் காணப்படும் ஹெலிகாப்டர் குறித்து விமானப் படையோ, ராணுவமோ இதுவரைக்கும் உறுதியான தகவல்கள் எதுவும் வெளியிடவில்லை.
வீடியோ பார்க்க:-
https://twitter.com/ANI/status/1468799533337382914
#WATCH | Final moments of Mi-17 chopper carrying CDS Bipin Rawat and 13 others before it crashed near Coonoor, Tamil Nadu yesterday
— ANI (@ANI) December 9, 2021
(Video Source: Locals present near accident spot) pic.twitter.com/jzdf0lGU5L
Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ
