Breaking News

ஹெலிகாப்டர் விபத்து குறித்து வதந்தி பரப்பாதீர்கள் : விமானப்படை அறிவிப்பு

அட்மின் மீடியா
0

ஹெலிகாப்ட்டர் விபத்தில் உண்மையை கண்டுபிடிக்கும் வரை தேவையின்றி யூகம் செய்யாதீர்கள் என விமானப்படை தெரிவித்துள்ளது.


குன்னூரில் நேற்று முன்தினம் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 11 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது..

இந்நிலையில், குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வரும் நிலையில், இதுகுறித்து விமானப்படை சார்பில், ஹெலிகாப்ட்டர் விபத்தில் உண்மையை கண்டுபிடிக்கும் வரை தேவையின்றி யூகம் செய்யாதீர்கள். விபத்துக்கான காரணத்தை அறிய முப்படைகளின் விசாரணை நடக்கிறது. விரைவாக விசாரணை நடத்தி உண்மைகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

https://twitter.com/IAF_MCC/status/1469195519570288646

Tags: தமிழக செய்திகள்

Share this