Breaking News

யூடியூப் பார்த்து பிரசவம் குழந்தை பலி– கணவனை கைது செய்த போலீஸ்!!

அட்மின் மீடியா
0

 ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பனப்பாக்கம் நெடும்புலி கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன். இவரது மனைவி கோமதி. மரச்செக்கு எண்ணெய் உற்பத்தி செய்யும் தொழில் செய்துவரும் லோகநாதனுக்கும், கோமதிக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் கோமதி கர்ப்பமாக இருந்துள்ளார். 


இவருக்கு 13ஆம் தேதி பிரசவ தேதி சொல்லப்பட்டுள்ளது.மருத்துவர்கள் குறித்து சொன்ன நாளில் பிரசவ வலி கோமதிக்கு ஏற்படாத நிலையில் 18ஆம் தேதி பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. ஆனால் மனைவியை மருத்துவமனையில் சேர்க்காத லோகநாதன் தனது அக்கா கீதாவின் உதவியுடன் வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார். 

தவறாக பார்க்கப்பட்ட பிரசவத்தால் இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து கோமதிக்கு அதிக அளவு ரத்தப் போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மயங்கி உள்ளார் இதனால் பயந்து போன லோகநாதன் தனது அக்காவின் உதவியுடன் கோமதி மற்றும் இறந்த குழந்தையை புன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். அங்கு கோமதிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். 

இதையடுத்து கோமதிக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் குழந்தை இறப்பு குறித்த விசாரணைக்கு மாவட்ட சுகாதார துணை இயக்குனர் மணிமாறன் உத்தரவிட்டுள்ளார்.

இதுபற்றிய விசாரணையில் யூ டியூப் மூலமாக மனைவிக்கு பிரசவம் பார்த்தது தெரியவந்தது இதனையடுத்து .இதனையடுத்து லோகநாதனை நெமிலி காவல்துறையினர் கைது செய்தனர்.தலைமறைவாக உள்ள அவரது அக்கா கீதாவை தேடி வருகின்றனர்.

Tags: தமிழக செய்திகள்

Share this