சவுதியில் தப்லிக் ஜமாத் தடையை மறுபரிசீலனை செய்யக: தாருல் உலூம் தேவ் பந்த் அறிக்கை
அட்மின் மீடியா
0
தாருல் உலூம் தேவ்பந்த் முஹ்தமிம் மௌலானா அபுல் காசிம் நுஃமானி அவர்கள் தப்லீக் ஜமாஅத் தொடர்பாக சவுதி அரேபிய அரசாங்கம் வெளியிட்டிரும் சுற்றறிக்கை குறித்து தமது அதிர்ச்சியை தெரிவித்துள்ளார்கள்.
தப்லீக் ஜமாஅத்தின் நிறுவனர் மௌலானா முஹம்மது இலியாஸ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தாருல் உலூம் தேவ்பந்த் தலைமையாசிரியர் ஷைகுல் ஹிந்து மௌலானா மஹ்மூது ஹசன் ரஹ்மத்துல்லாஹி அவர்களுடைய மாணவர் ஆவார்.
நமது பெரியார்கள் உளப் பரிசுத்தமான இம் முயற்சியின் மூலம் மார்க்க விளக்கங்களிலும் மார்க்கத்தின் செயல்பாடுகளிலும் மிகப் பெரும் பலனை இந்த உம்மத்திற்கு வழங்கினார்கள்.
சிறு கருத்து வேற்றுமை இருந்த போதிலும் இந்த ஜமாஅத் தனது வேலையை செவ்வனே செய்து கொண்டிருக்கிறது.
தனது தூய செயல்கள் மூலம் உலகம் முழுவதிலும் பரவலாக வேலை செய்கின்ற ஜமாஅத்தை ஷிர்க், பித்அத், தீவிரவாதம் என்ற அடைமொழிகளோடு தடை செய்வது ஒரு அடிப்படையற்ற செயலாகும்.இதை தாருல் உலூம் தேவ்பந்த் மிக வன்மையாக கண்டிக்கிறது .
மேலும் இந்தத் தடையை மறுபரிசீலனை செய்யுமாறும் இவ்வாறு தப்லீக் ஜமாஅத்திற்கு எதிராக செய்யப்படும் பிரச்சாரங்களில் இருந்து தவிர்ந்து கொள்ளுமாறும் சவுதி அரேபிய அரசாங்கத்தை தாருல் உலூம் வேண்டிக்கொள்கிறது.
இப்படிக்கு
மௌலானா முப்தி அபுல்காசிம் நுஃமானி.
தமிழில் மொழி பெயர்த்தவர்
முஹம்மது மன்சூர் காஷிபி.
தலைமை இமாம்
மக்கா மஸ்ஜித்
சென்னை.
தாருல் உலூம் தேவ் பந்த் அறிக்கை
Tags: அரசியல் இந்திய செய்திகள் மார்க்க செய்தி வெளிநாட்டு செய்திகள்