மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் செய்தியாளர்களும் சேர்ப்பு... அரசாணை வெளியிட்ட தமிழக அரசு
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில், செய்தித்துறையில் அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள் மற்றும் பருவ இதழ் செய்தியாளர்களை பயனாளிகளாக இணைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிக்கையாளர்களின் குடும்பங்களை வருமான உச்ச வரம்பின்றி முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இணைக்கவும், இனி வரும் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை இடமிருந்து நடைமுறையிலுள்ள காப்பீட்டு திட்டத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்களின் பட்டியலை சேர்க்கவும் முடிவெடுத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்