Breaking News

மொபைல் மூலம் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் போலியா ஒரிஜினலா கண்டுபிடிப்பது எப்படி?

அட்மின் மீடியா
0

கொரோனா தடுப்பூசி சான்றிதழ் போலியா ஒரிஜினலா கண்டுபிடிப்பது எப்படி?




முதலில் நீங்கள் மத்திய அரசின் www.cowin.gov.in/ என்ற கோவின் இணையதளத்திற்க்கு செல்லுங்கள்

அடுத்து அதில்  PLATFORMS என்ற ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்

அடுத்து அதில் உள்ள Verify certificate என்ற ஆப்ஷனை தேர்வு செய்துகொள்ளுங்கள் அல்லது  https://verify.cowin.gov.in/ இந்த லின்ங்கை கிளிக் செய்யுங்கள்

அடுத்து அதில்  ‘Scan QR Code’ என்று காட்டும் பச்சை பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். 

அடுத்து அதில் உங்கள் மொபைல் போன் அல்லது லேப்டாப் கேமரா வசதிகளை ஆன் செய்வதற்கு அனுமதி கேட்டும். நீங்கள் அனுமதி கொடுத்தவுடன் கேமரா ஆன் ஆகும்.

அதன்பின்பு தடுப்பூசி சான்றிதழில் கீழே உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும். அந்த சான்றிதழ் உண்மையானதாக இருந்தால் “Certificate successfully”  சான்றிதழ் வெற்றிகரமாக சரிபார்க்கப்பட்டது என தகவல் வரும் மேலும் . 

அதில் உங்கள் பெயர், வயது, எடுத்துக்கொண்ட தடுப்பூசி விவரம் எல்லா தகவல்களும் ஸ்கிரீனில் காட்டும்.போலி சான்றிதழ் என்றால் சான்றிதழ் செல்லாதது எனக் காட்டும். 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback