Breaking News

லட்சத்தீவில் வெள்ளிகிழமைக்கு பதிலாக ஞாயிறு அன்று விடுமுறை – புதிய நடைமுறை

அட்மின் மீடியா
0

இந்தியாவின் மிகச் சிறிய யூனியன் பிரதேசம் தான் லட்சத்தீவுகள். கேரளத்திற்கு மேற்கே 32 சதுர கிமீ நிலப்பரப்பு கொண்டது. மக்கள்தொகை ஒரு லட்சத்திற்கும் கீழ் தான் இருக்கிறது. அவர்களில் 96 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் இஸ்லாமியர்களே. அரபி, மலையாளம் மொழி பேசுகிறவர்கள். 

லட்சத்தீவு பகுதியில் அதிகமாக இஸ்லாமியர்கள் உள்ள நிலையில் அங்கு வாரம்தோறும் ஜும்மா தொழுகைக்காக வெள்ளிக்கிழமை அன்று மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம்.

 


இந்த நிலையில், லட்சத்தீவில் இனி மாணவர்களுக்கு வெள்ளிக்கிழமை அன்று விடுமுறை கிடையாது, அதற்கு பதில் ஞாயிற்றுக்கிழமை அன்று விடுமுறை என லட்சத்தீவு கல்வித்துறை அறிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை விடுமுறையை நிர்வாகம் ரத்து செய்ததால் மாணவர்கள் மட்டுமின்றி அங்கு வாழும் மக்களும் பெரும் அதிருப்தியில் காணப்படுகின்றனர்
 

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback