அதிகரிக்கும் ஒமிக்ரான் இரவு நேர ஊரடங்கு அமல் – மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்!
ஒமிக்ரான் வைரசை கட்டுப்படுத்த தீவிர கட்டுப்பாடு விதிக்க வேண்டும் மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்
ஒமைக்ரான் கொரோனா பரவலையொட்டி இரவு நேர ஊரடங்கு,
திருமணம்-இறப்பு நிகழ்வுகளில் கட்டுப்பாடு,
அலுவலகம், தொழிற்சாலை, பொது போக்குவரத்தில் ஆட்குறைப்பு,
மக்கள் கூட்டத்திற்கு தடை
உள்ளிட்டவைகளை செயல்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று, இந்தியாவில் 13 மாநிலங்களில் பரவியுள்ளது. நாட்டில் இதுவரை ஒமிக்ரான் வகை தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 200 ஐ தாண்டியுள்ளது. இந்நிலையில்,
மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்,
கொரோனா தொற்று பரவல் 10% மேல் இருந்தால், அந்த பகுதிகளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
டெல்டாவைவிட ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று 3 மடங்கு வேகமாக பரவக்கூடியது என்பதால் மருத்துவமனைகளில் படுக்கை வசதி, ஆம்புலன்ஸ் மற்றும் ஆக்சிஜன் வசதி இருப்பை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
மேலும், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாம் என்றும் கூறியுள்ளார்.
ஒமிக்ரான் பரவல் அதிகரித்துள்ள நிலையில், பெரிய அளவில் கூடும் கூட்டங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும்
மாவட்ட அளவில் கடும் நடவடிக்கை எடுத்தால், தொற்று பரவலை கட்டுப்படுத்திவிட முடியும்.
தடுப்பூசி செலுத்தும் வேகத்தை அதிகரிப்பதுடன், அனைவருக்கும் தடுப்பூசி என்பதை நிலை நிறுத்தி பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும் ராஜேஷ் பூஷன் அறிவுறுத்தியுள்ளார்.
Tags: இந்திய செய்திகள்