கேரளாவில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்....
அட்மின் மீடியா
0
ஓமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு கேரளா மாநிலத்தில் இன்று முதல் ஜனவரி 2 வரை இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற கொரோனா ஆய்வுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி, இன்று இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: இந்திய செய்திகள்