Breaking News

ஆன்லைன் தேர்வு நடத்தவேண்டும் என போராடிய மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து - காவல்துறை!

அட்மின் மீடியா
0

ஆன்லைன் தேர்வு நடத்தவேண்டும் என போராடிய மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து - காவல்துறை!

 


கடந்த மாதத்தில் ஆன்லைன் தேர்வுகள் நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களின் மீது மதுரை மாநகரில் 9 வழக்குகள், கள்ளக்குறிச்சி மாவட்டம், சென்னை மற்றும் திருச்சி மாநகரில் தலா ஒரு வழக்கு என தமிழகத்தில் மொத்தம் 12 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.

மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கல்லூரி மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட 12 வழக்குகளையும் கைவிட உத்தரவிட்டதின் பேரில் மேற்படி அனைத்து வழக்குகளிலும் தமிழக காவல் துறையினரால் மேல் நடவடிக்கைகை விடப்பட்டது. என அறிவிக்கப்பட்டுள்ளது

 

 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback