Breaking News

வீட்டின்மீது விழுந்த ராணுவ ஹெலிகாப்டர் - உயிர் தப்பிய தொழிலாளர்கள்- மீட்பு வீடியோ

அட்மின் மீடியா
0

குன்னூர் வெலிங்டன் இராணுவ மையத்தில் நடைபெற இருந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து கோவை வந்த முப்படைகளின் தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி, விமானி உட்பட மொத்தம் 14அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் குன்னூர் வெலிங்டன் நோக்கி புறப்பட்டார்கள்



ராணுவ ஹெலிகாப்டர் குன்னூர் காட்டேரி பகுதியில் உள்ள நஞ்சப்பா சத்திரம் பகுதியில் பறந்த போது மோசமான காலநிலை காரணமாக மலை சரிவில் உள்ள மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. அப்போது ஹெலிகாப்டர் தீப்பற்றி எரிந்தது. அதனால் ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். விமானி ஒருவர் மட்டுமே படுகாயங்களுடன் உயிர் தப்பியனார்.

ஹெலிகேப்டர் வன பகுதிக்கும் தனியார் தேயிலை தோட்டத்தின் எல்லையில் உள்ள குடியிருப்பு பகுதியை ஒட்டியும் விழுந்தது. அப்போது பலத்த சத்தம் கேட்டதுடன் 

அந்த ராணுவ ஹெலிகாப்டர் ஜெயசங்கர் என்ற கூலி தொழிலாளியின் வீட்டின் மீதும் விழுந்தது. இதனால் வீட்டின் 2 அறைகள் சேதம் அடைந்தது. ஆனால் ஹெலிகேப்டர் விழுந்த போது வீட்டில் ஜெய்சங்கர் உள்பட யாரும் இல்லாமல் வேலைக்கு சென்றதால் உயிர் தப்பி உள்ளனர்.

வீடியோ பார்க்க:-

https://twitter.com/sandhiyaTweets_/status/1468543022937698305

Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback