வரலாறு கானாத கனமழையால் சிக்கி தவிக்கும் மலேசியா வீடியோ
மலேசியாவில் வெள்ளிக்கிழமை முதல் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக சிலாங்கூர் உட்பட பகாங் கிளந்தான் திரங்கானு ஆகிய நான்கு மாநிலங்களில் பெய்த கனமழையையடுத்து அம்மாநிலங்களில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது,
சிலாங்கூரில் பெய்த வரலாறு காணாத அடைமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது மேலும் சிலாங்கூரில் வரலாறு காணாத மழை: 380 மில்லிமீட்டர் பதிவானதாக மந்திரிபெசார் தகவல் தெரிவித்துள்ளார்
சிலாங்கூர் கிள்ளானில் பல மணி நேரத்திற்கு பெய்த கடும் மழையால் தாமான் செரோஜா உள்ளிட்ட பல பகுதிகளில் வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது
பகாங்கிலும் பெய்த தொடர் மழையால் மாரான் ரவூப் மாவட்டங்களிலுள்ள 60 குடும்பங்களைச் சேர்ந்த 218 பேர் தற்காலிக நிவாரண மையங்களுக்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர்
கிள்ளான், பெட்டாலிங், சிப்பாங், கோல லங்காட், கோல சிலாங்கூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 46 தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் 3,582 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்
கிளந்தானில் குவாலா கிராய் குவா மூசாங் ஜெலி தானா மேரா ஆகிய பகுதிகளில் பெரு வெள்ளம் ஏற்பட்டுள்ளது .சிலாங்கூர், பாகாங், கிளந்தான் பகுதியில் உள்ள பல ஆறுகளில் நீர்மட்டம் அபாய அளவை எட்டிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மலேசியாவில் பெய்த கனமழையால் வெள்ள வீடியோக்கள்
https://twitter.com/Brave_spirit81/status/1472150812533174273
https://twitter.com/ChaudharyParvez/status/1472399079153946626
https://twitter.com/Brave_spirit81/status/1472115966360367109
https://twitter.com/FbmHero/status/1472380179213291520
https://twitter.com/paultantk/status/1472107940483981316
https://twitter.com/UnbelievableEv1/status/1472295820359880719
Severe flooding in Selangor, Malaysia cauising evacuations of more than 3,000 peoplehttps://t.co/uUCJP4titL#banjir #selangor #malaysia #floods #disaster #storm #flooding #malaysianews pic.twitter.com/pgR7MQxZgT
— Unbelievable Events (@UnbelievableEv1) December 18, 2021
Tags: வெளிநாட்டு செய்திகள்