நரிக்குறவர்களை பேருந்திலிருந்து இறக்கி விட்ட ஓட்டுநர், நடத்துனர் சஸ்பெண்ட்!
நாகர் கோவிலில் குறவர் குடும்பத்தினரின் உடமைகளை வெளியில் போட்டு, பேருந்திலிருந்து இறக்கி விடப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.அரசு பேருந்திற்குள் ஏறிய நாகர்கோவிலை சேர்ந்த வயது முதிர்ந்த தாய், தந்தை இருவருடனும் வந்த ஒரு குழந்தை மூவரையும் அவர்களது உடமைகளையும் அந்த பேருந்து நடத்துனர் ரோட்டில் தூக்கி வெளியில் எறிந்து, கீழே இறங்குங்கள் என கூறி குடும்பத்தோடு பேருந்தில் இருந்து வெளியே அனுப்பியுள்ளார்.அந்த குழந்தை எதற்காக இறக்கி விடப்படுகிறோம் என்பதே தெரியாமல் கதறி அழ, முதியவர் என்ன செய்வதென்று அறியாமல் நடுரோட்டில் நிற்கிறார்.அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது
நாகர்கோவிலில் பேருந்தில் இருந்து இறக்கிவிடப்ட்ட குடும்பம் அதிர்ச்சி வீடியோ
https://www.adminmedia.in/2021/12/blog-post_32.html
Tags: தமிழக செய்திகள்