குன்னூர் அருகே ரானுவ ஹெலிகாப்டர் விபத்து நடந்தது எப்படி?
முப்படைகளின் தலைமை தளபதி விபின் ராவத் பயணித்த விமானப் படை ஹெலிகாப்டர், நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.
விபத்தில் சிக்கிய விமானப் படை ஹெலிகாப்டரில் முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத், அவரது மனைவி மற்றும் உயர் அதிகாரிகள் என 14 பேர் பயணித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து நிகழ்ந்த இடத்திலிருந்து, ஹெலிகாப்டர் விபத்து எப்படி நடந்திருக்கலாம் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுளது.
ஹெலிகாப்டர் சூலூரிலிருந்து வெலிங்டனுக்கு முற்பகல், 11.47 மணிக்கு புறப்பட்டுள்ளது.இது 12.20 மணிக்கு குன்னூர் அருகே அடர்ந்த வனப்பகுதிக்கு மேலே பறந்தபோது, அப்பகுதியில் கடுமையான பனிமூட்டம் காணப்பட்டதால், ஹெலிகாப்டர் தாழ்வாகப் பறந்திருக்கக் கூடும். இதன் காரணமாக, ஹெலிகாப்டர், உயரமான மரத்தில் மோதி கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து இருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் 10 பேரின் உடல்கள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.
நான்கு பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Tags: தமிழக செய்திகள்