அமீரகத்தில் வரும் பயனிகளுக்கு 7 நாள் தனிமை கட்டாயம்- மும்பை மாநகராட்சி அறிவிப்பு
அட்மின் மீடியா
0
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து மும்பைக்கு வரும் பயணிகளுக்கு 7 நாள் வீட்டு தனிமைப்படுத்தல், ஆர்டி-பிசிஆர் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவின் தலைநகர் மும்பையில் கொரோனா வைரஸ் மற்றும் ஓமைக்ரான் அதிகரித்து வரும் நிலையில், மும்பையில் இன்றுமுதல் ஜனவரி 7 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளனர். மேலும் உணவகங்கள், பார்கள், பப்கள், கிளப்கள் உள்ளிட்ட மூடிய மற்றும் திறந்த வெளிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து வரும் சர்வதேச பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் வெளியிட்ட உத்தரவின்படி, துபாய் உட்பட ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து வரும் அனைத்து சர்வதேச பயணிகளும் மும்பையில் வசிப்பவர்கள் கட்டாயமாக 7 நாள் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.மேலும் பயணிகள் விமான நிலையத்தில் தரையிறங்கியவுடன் RT-PCR சோதனை (RT-PCR) கட்டாயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags: இந்திய செய்திகள்