வெளிநாடுகளில் இருந்து வந்தால் 7 நாட்கள் தனிமை கட்டாயம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
நாளை முதல் வெளிநாடுகளில் இருந்து வந்தால் இவை கட்டாயம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!
இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள்
அபாயம் மற்றும் அபாயமில்லாத அனைத்து வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்கள் வீடுகளில் கட்டாயம் 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
எட்டாவது நாள் கொரோனா இல்லை என்பது பரிசோதனை முடிவில் தெரிய வந்தால் வெளியில் வர வேண்டும்.புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகைகளை கொரோனா விதிமுறைகளை பின்பற்றி கொண்டாட வேண்டும்.
ஆனால்,நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களை கூட்டமாக கொண்டாடுவதை தவிர்க்க வேண்டும்.
வெளிமாநிலங்களுக்கு சென்றும் புத்தாண்டு கொண்டாடுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.என்று தெரிவித்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள்