பள்ளி மாணவ மாணவிகளே குறளோவியம் போட்டி பரிசு 50,000/ முழு விவரம்....
உலகப் பொதுமறையான திருக்குறளில் குறளோவியம் என்ற தலைப்பில் ஓவியப் போட்டி நடைபெறவுள்ளது.
இணைய வழியிலான இப்போட்டியில், தமிழ்நாட்டில் பயிலும் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களும், அனைத்து வகையான கல்லூரி மாணவர்களும் பங்கேற்க்கலாம்
மாணவர்கள் தங்களுக்குப் பிடித்தமான குறட்பாக்களில் ஏதேனும் ஒன்றினைத் தேர்வு செய்து, அக்குறட்பாக்களின் பொருளை மையமாகக் கொண்டு தெளிவாக வண்ண ஓவியம் வரைந்து www.kuraloviyam.com என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்து தபாலிலும் அனுப்ப வேண்டும்.
தபால் முகவரி:-
இயக்குநர்,
தமிழ் இணையக் கல்விக்கழகம்,
கோட்டூர்,
சென்னை - 25.
தபால் உறையின் மேல் குறளோவியம் ஓவியப்போட்டி என்று குறிப்பிட்டு அனுப்பவேண்டும்
கடைசி நாள்:-
31-12-2021
பரிசு தொகை:-
முதல் பரிசாக ரூ.50,000/-,
இரண்டாம் பரிசாக - ரூ.30,000/-,
மூன்றாம் பரிசாக - ரூ.20,000/-,
சிறப்புப் பரிசாக தலா ரூ.5,000/- 20 நபர்களுக்கு வழங்கப்படும்.
போட்டியில் கலந்துகொள்ள:-
போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவ மாணவிகள்
www.kuraloviyam.com என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
Tags: தமிழக செய்திகள்