கோவாவில் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.5,000 வழங்கப்படும் – திரிணாமுல் காங்கிரஸ் வாக்குறுதி..!
அட்மின் மீடியா
0
கோவாவில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதந்தோறும் 5000 ரூபாய் வழங்கப்படும் என்று மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார்
கோவா மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் 40 சட்டசபை தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் வாக்குறுதியில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ .5000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதந்தோறும் 5000 ரூபாய் வழங்கப்படும் என்று திரிணாமுல் எம்.பி மஹுவா மொய்த்ரா தெரிவித்தார்.
இந்த திட்டத்திற்கு ‘கிரஹ லக்ஷ்மி’ என பெயரிடப்பட்டுள்ளது.
Tags: அரசியல்