நெல்லையில் பள்ளி கட்டடம் இடிந்து 3 மாணவர்கள் பலி!
திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றின் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர்.
நெல்லை பொருட்காட்சி திடல் அருகே உள்ள சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது . இதில் 9 ம் வகுப்பு படிக்கும் நாணவன் அன்பழகன் 8ம் வகுப்பு படிக்கும் மாணவன் விஸ்வ ரஞ்சன், 6 ம் வகுப்பு படிக்கும் மாணவன், சுதீஸ் ஆகிய மூன்று மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் 4 மாணவர்கள் படுகாயங்களுடன் திருநெல்வேலி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் விரைந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர் .
Tags: தமிழக செய்திகள்