தமிழகத்தில்மேலும் 33 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு
தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு ஒரே ஒருவருக்கு மட்டும் இருந்தது. இந்தநிலையில் தற்போது ஒமைக்ரான் பாதிப்பு மேலும் 33 பேருக்கு பரவி உள்ளதால் தொற்று எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.
இதுபற்றி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் நைஜீரியாவில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதியான நிலையில், தற்போது மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் 24 பேருக்கு ஒமிக்ரான் முடிவு வரவேண்டி உள்ளது என்றும் ஒமிக்ரான் உறுதியான 34 பேரில் 30 பேர் வெளிநாடு, ஒருவர் கேரளாவில் இருந்து தமிழகம் வந்தவர் என தெரிவித்தார்.
சோதனைக்கு அனுப்பப்பட்டவரக்ளில் 60 பேருக்கு முடிவுகள் வந்துள்ளன. அதில் 33 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. கொரோனா உறுதியான 114 பேரில் 57 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி இருந்ததால் மாதிரி ஆய்வுக்கு அனுப்பப்பட்டது என அமைச்சர் குறிப்பிட்டார்.
ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா, டெல்லியை தொடர்ந்து தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது எனவும் கூறினார்
Tags: தமிழக செய்திகள்