Breaking News

ஜனவரி 3 முதல் 15 வயது முதல் 18 வயதினருக்கு கொரானா தடுப்பூசி போடப்படும் மோடி அறிவிப்பு.....

அட்மின் மீடியா
0

இன்று இரவு 9.45 மணிக்கு கானொளி வாயிலாக நாட்டு மக்களிடம் பாரத பிரதமர் மோடி அவர்கள் உரையாற்றினார் அப்போது


அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்தைக் கூறி உரையாற்ற ஆரம்பித்தார் 

இந்தியாவிலும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது.இது குறித்து நாட்டு மக்கள் அச்சம் கொள்ளாமலும் அலட்சியப் படுத்தாமலும் விழிப்புடன் இருக்க வேண்டும். கொரோனா இன்னும் நம்மை விட்டு விலகவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்

கொண்டாட்டங்களுக்கு மத்தியில் மக்கள் பாதுகாப்பை மறந்து விடக் கூடாது உலகம் முழுவதும் ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவி வருகிறது, மேலும் மரபணு தடுப்பூசி விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறிய மோடி அவர்கள் மேலும்கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும், அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும்

குழந்தைகளுக்காக 90,000 படுக்கைகள், 4 லட்சம் ஆக்சிஜன் சிலிண்டர்கள் தயார் நிலையில் உள்ளன நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும்  தட்டுப்பாடின்றி ஆக்ஸிஜன் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

நாடு முழுவதும் முன்கள பணியாளர்களுக்கான பூஸ்டர் தடுப்பு ஊசிகள் செலுத்தும் பணி ஜனவரி 10ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என அறித்த பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 

அதேபோல் கொரானா தடுப்பூசிக்கு அனுமதி வழங்குவதிலும், அதனை மாநிலங்களுக்கு பிரித்து கொடுப்பதிலும் மத்திய அரசு விரைவாக செயல்படுகிறது, எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் என கூறிய பாரத பிரதமர் அவர்கள் மேலும் வரும் ஜனவரி 3-ஆம் தேதியிலிருந்து குழந்தைகளுக்கான தடுப்பூசி செலுத்தப்படுகிறது முதல்கட்டமாக 15 வயதிலிருந்து 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு

Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback