Breaking News

மேம்பாலத்தில் விரிசல் - 23 ரயில்கள் ரத்து முழு விவரம்.....

அட்மின் மீடியா
0

வேலூர் காட்பாடி அருகே பொன்னையாற்றின் பாலத்தில் ஏற்பட்ட விரிசலால் இன்று 23 ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது



வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே திருவலத்தில் பொன்னையாற்றின் பாலத்தில் ஏற்பட்ட விரிசலால் இன்று 23 ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. ரயில்வே மேம்பாலத்தில் சீரமைப்பு பணி நடைபெறுவதால் நாளையும் 3 ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. மேலும் ரத்து செய்யப்பட்ட ரெயில்களுக்கான முன்பதிவு கட்டணங்கள் பயணிகளுக்கு திருப்பி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு - சென்னை சதாப்தி, 

சென்னை - கோவை சதாப்தி ரெயில் சேவை இருமார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

சென்னை சென்ட்ரல் - ஜோலார்பேட்டை ஏலகிரி விரைவு ரயில் சேவை ஆகியவை இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

சென்னை சென்ட்ரல் - மங்களூரு அதிவிரைவு ரயில், வெஸ்ட் கோஸ்ட் விரைவு ரயில்; 

சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் இடையேயான அதி விரைவு ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஜோலாபேட்டை, சென்னை, வேலூர், பெங்களூரு, மைசூரு, மங்களூரு, கோவை, ரேணிகுண்டா, அரக்கோணம் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.




Tags: தமிழக செய்திகள்

Share this