ஸ்ரீபெரும்பத்தூரில் 2000க்கும் மேற்பட்ட பெண்கள் விடிய விடிய சாலை மறியல்... முழு விவரம்....
செல்ஃபோன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் தமிழகத்தில் இருந்து பல மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பணி புரிந்து வருகின்றார்கள். அவர்களை அந்நிறுவனம் கம்பெனியை சுற்றியுள்ள அருகில் உள்ள பல இடங்களில் உள்ள விடுதிகளில் தங்க வைத்துள்ளார்கள்
இநிந்லையில் பூந்தமல்லியில் தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த 200க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வழங்கப்பட்ட உணவு சாப்பிட்ட பல பெண்களுக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. இதனால், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதில் சிகிச்சை முடிந்து பலரும் திரும்பிய நிலையில், 8 பெண்களின் நிலை என்னவென்று தெரியவில்லை.நிறுவனம் சரியாக பதில் அளிக்கவில்லை, எனவும் அதில் சிலர் இறந்துவிட்டதாக சமூகவலைதளங்களில் வதந்தி பரவியது
இதனை அடுத்து அங்கு பணி புரியும் பெண்கள் நிர்வாகத்தை கண்டித்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் எங்களுக்கு முறையான உணவு, மருத்துவ வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. எங்களைக் கொத்தடிமை போல் நடத்திவருகிறார்கள். சொந்த ஊர்களுக்குச் செல்ல வேண்டுமென்றாலும் விடுப்பு கொடுக்க மறுக்கிறார்கள் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்
இதையடுத்து, போராட்டம் நடைபெறும் இடத்திற்கு நேரடியாக வந்த மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, பெண் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர், தொழிற்சாலையில் 2 பெண் ஊழியர்கள் இறந்ததாக வெளியாகும் தகவல் வதந்தி ஆகும். மயக்கம் அடைந்த புகைப்படத்தை உயிரிழப்பு என வதந்தி பரப்பப்படுகிறது. உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் 4 பேரும் நலமாக உள்ளனர். தங்கும் உணவு விடுதி வார்டன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
மேலும், 2 பெண்களுடனும் வீடியோ காலில் பேசி அதனை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் காண்பித்தார். சாலை மறியலை கைவிடுமாறு பெண் ஊழியர்களை கேட்டுக்கொண்டார்.
Tags: தமிழக செய்திகள்