Breaking News

டெஸ்லா காரை பழுது பார்க்க 17 லட்சம் கேட்டதால் ..டெஸ்லா காரை வெடிவைத்து தகர்த்த உரிமையாளர் வீடியோ

அட்மின் மீடியா
0

பின்லாந்து நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள ஜாலா என்ற கிராமத்தைச் சேர்ந்த தூமஸ் கடைனென் என்பவர், வெள்ளை நிற ‘டெஸ்லா மாடல் எஸ்’ வகை காரை வாங்கி உள்ளார். இவரது கார் ரிப்பேர் ஆன நிலையில், பேட்டரி மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு இந்திய ரூபாய் மதிப்பில் 17 லட்சம் ஆகும் என மெக்கானிக் கூறியதால், இவ்வளவு செலவு செய்வதற்கு, காரை உடைத்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளார். அதன்படி, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து, காரை 30 கிலோ வெடிமருந்து பயன்படுத்தி வெடிக்கச் செய்துள்ளார்.இந்த நிகழ்வை ஒரு யூடியூப் சேனலின் குழுவினர்  வீடியோவாக எடுத்து பதிவிட்டுள்ளார்கள்



அந்த வீடியோவில் கார் உரிமையாளர் தூமஸ் கடைனென்:

ஒரு நாள் கார் ஸ்டார்ட் ஆகாமல் நின்றுவிட்டது. இதனால் இழுவை வாகனம் மூலம், காரை வாங்கிய டீலரின் சர்வீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்துச் சென்றேன்.கிட்டத்தட்ட ஒரு மாதம் அங்கேயே இருந்தது. பின்னர் ஒரு நாள் அங்கிருந்து எனக்கு போன் வந்தது. காரை ரிப்பேர் செய்ய முடியாது, முழு பேட்டரியையும் மாற்றினால்தான் காரை இயக்க முடியும் என்று மெக்கானிக் கூறினார். அதற்கு 20000 யூரோஸ் (இந்திய மதிப்பில் 17 லட்சம் ரூபாய்) செலவாகும் என்றும் தெரிவித்தார்.எனவே, நான் எனது காரை எடுத்துக்கொள்கிறேன் என அவர்களிடம் சொன்னேன். அதன் பிறகு இதை சரிசெய்யும் முடிவை விடுத்தது எனது காரை வெடிக்கவைக்க முடிவு செய்தேன் " என அவர் தெரிவித்துள்ளார்.இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.



வீடியோவை பார்க்க:-

https://www.youtube.com/watch?v=7_9aVzf5fC4

Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ

Share this