Breaking News

திருவாரூர் மாவட்டத்தில் டிசம்பர் 15ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

அட்மின் மீடியா
0

திருவாரூர் மாவட்டத்தில் டிசம்பர் 15ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டை கந்தூரி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முத்துப்பேட்டை - ஜாம்புவானோடை தர்ஹா மஹான் செய்குதாவுது ஒலியுல்லா ஆண்டவரின் 720 வது ஆண்டு விழா கொடி ஊர்வலமாக புறப்பட்டு பழைய, புதிய பேருந்து நிலையம், ஆசாத் நகர் வழியாக சென்று மீண்டும் தர்ஹாவை அடைந்து கந்தூரி விழா கொடி ஏற்றப்பட்டது .

இந்த நிலையில், முத்துப்பேட்டை கந்தூரி விழாவையொட்டி வரும் 15ஆம் தேதி திருவாரூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 15ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் அதற்கு பதிலாக ஜனவரி 8ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Share this