Breaking News

கோவை மாணவி தற்கொலை: பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீது போக்சோ வழக்கு..!

அட்மின் மீடியா
0

கோவை கோட்டை மேடு பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள சின்மயா பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் மாணவி சமீபத்தில் அந்த பள்ளியில் இருந்து மாற்று சான்றிதழை வாங்கி கொண்டு வேறு பள்ளியில் சேர வெளியேறியுள்ளார். ஆனால் பள்ளி மாறுவதற்கான காரணத்தை பெற்றோரிடம் கூறாமல் இருந்துள்ளார். 



இந்நிலையில் வியாழக்கிழமை மாலை மாணவி வீட்டில் பேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இதையடுத்து அங்கு வந்த உக்கடம் போலிசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் மாணவி ஆர்.எஸ்.புரத்தில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் பணியாற்றும் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிய வந்தது. அவரிடமிருந்து தப்பவே பள்ளியில் இருந்து விலகியதாகவும், தொடர்ந்து தொல்லை கொடுத்ததால் தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாகவும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது போக்சோ சட்டம், தற்கொலைக்கு தூண்டுதல், பாலியல் தொல்லை அளித்தல் ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

இந்நிலையில் மாணவி வழக்கில் சின்மயா பள்ளியில் முதல்வர் மீரா ஜாக்சன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும், அவரை கைது செய்ய 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது

Tags: தமிழக செய்திகள்

Share this