Breaking News

பேஸ்புக் சென்றால் கண்ணத்தில் அடிக்க சம்பளம் கொடுத்த அமெரிக்க தொழில் அதிபர்

அட்மின் மீடியா
0

இந்திய வம்சாவளி அமெரிக்க நபர்தான் மனீஷ் சேத்தி  தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்.. கம்பியூட்டர் புரோகிராமர்,மேலும் இவர் பாவ்லோக் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.




2012-ல் இந்த நிறுவனத்தை தொடங்கியவர்  கம்பெனியில் எதிர்பார்த்த  லாபம் வரவில்லை  இதர்க்கு காரணம் என்ன என்று யோசிக்கையில் இவர் அதிகனேரம் பேஸ்புக்கில் நேரம் செலவு செய்வதால் தனது நிறுவனத்தில் கவனம் செலுத்த முடியவில்லை என முடிவு எடுத்தவர் இதிலிருந்து மீளவும் இனிமேல் தேவையில்லாமல் ஃபேஸ்புக் பார்க்க கூடாது என்று முடிவு செய்தார்.. 

ஆனாலும் அவரால் ஃபேஸ்புக் பார்க்காமல் இருக்க முடியவில்லை.. அதனால், கிரெய்க்லிஸ்ட் என்ற கம்பெனியில் இருந்து ஒரு பெண்ணை வேலைக்கு அமர்த்தி உள்ளார்.. அவரது பெயர் காரா. இவரது பணி என்ன்வென்றால் தான்  எப்போது பேஸ்புக் பக்கம் போனாலும் அப்போதெல்லாம் காரா, அவரது  கன்னத்தில் பளார்னு ஒரு அறை விடணும்.. இதுதான் அவரது பணி.. இதற்கு காராவுக்கு தரப்பட்ட சம்பளம், ஒரு மணி நேரத்திற்கு 8 டாலர்கள்.. இந்த சம்பவம் 2012-ல் நடந்துள்ளது..

தர்போது அந்த நிறுவனத்தின் உற்பத்தி திறன் 98 சதவீதம் அதிகரித்துவிட்டதாம்.. காராவை வேலைக்கு அமர்த்தியது முதல், கம்பெனி வளர்ச்சி பெற்றது வரை சோஷியல் மீடியாவில் அத்தனை செய்திகளும் தற்போது வைரலாகி கொண்டிருக்கின்றன. 

Tags: வெளிநாட்டு செய்திகள்

Share this