Breaking News

தமிழகத்தில் இன்றும் தொடரும் அதி கனமழை : வானிலை ஆய்வுமைய அறிக்கை

அட்மின் மீடியா
0

 வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு (3.1 கிலோமீட்டர் உயரம் வரை) சுழற்சி காரணமாக


                               

07.11.2021 இன்று 

சென்னை, 

திருவள்ளூர், 

காஞ்சிபுரம், 

செங்கல்பட்டு, 

கடலூர், 

விழுப்புரம் 

மற்றும் 

புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும் சில நேரங்களில் அதி கனமழையும், 


புதுக்கோட்டை, 

ராமநாதபுரம், 

மதுரை, 

தேனி, 

திண்டுக்கல், 

திருப்பூர், 

கரூர், 

நீலகிரி, 

கோயம்புத்தூர், 

கள்ளக்குறிச்சி 

மற்றும் சேலம் 

மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், 

தஞ்சாவூர், 

திருவாரூர், 

அரியலூர், 

பெரம்பலூர், 

திருச்சிராப்பள்ளி 

மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும். 

காரைக்கால் மற்றும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.


வானிலை ஆய்வுமைய அறிக்கை:-

http://www.imdchennai.gov.in/tamilrain_fc.pdf

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback