Breaking News

போன்பே, கூகுள்பே.அமேசான் பே, பீம் ஆப், பேடிஎம் மூலம் ஒரே நொடியில் மின்கட்டணம் செலுத்துவது எப்படி?

அட்மின் மீடியா
0

ஆன்லைன் மூலம் மின் கட்டணம் எங்கும் அலையாமல் நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் மூலம் கட்டிகொள்ளலாம்

BHIM ஆப் மூலம் மின் கட்டணம் செலுத்துவது எப்படி?

பீம் ஆப்பில் Pay Bills என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 

அங்கே மின் கட்டணம் முதல் ரீசார்ஜ் வரை பல ஆப்ஷன்கள் வழங்கப்பட்டிருக்கும். 

அதில் எலக்ட்ரிக் பில் என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள்

அடுத்து மாநிலம் தேர்வு செய்து அதில் உங்கள் மின் இணைப்பு எண்னை டைப் செய்யுங்கள் 

அடுத்து உங்கள் மின் தொகைக்கு ஓகே கொடுக்க வேண்டும். 

அதனை தொடர்ந்து UPI Pin டைப் செய்த மறுகணம் பில் கட்டணம் செலுத்தப்பட்டுவிடும்.

பேடிஎம் மூலம் மின் கட்டணம் செலுத்துவது எப்படி

முகப்பு பக்கத்தில் இருக்கும் ரீசார்ஜ் மற்றும் பில் பேமெண்ட் என்ற பிரிவை தேர்ந்தெடுக்க வேண்டும். 

அதில் மின்சார கட்டணம் என்பதை தேர்ந்தெடுத்து பின்பு அதில் மாநிலத்தை தேர்வு செய்ய வேண்டும். 

அடுத்து அதில் உங்கள் மின் இணைப்பு எண்னை டைப் செய்யுங்கள் 

அடுத்து உங்கள் மின் தொகைக்கு ஓகே கொடுக்க வேண்டும். 

அதனை தொடர்ந்து UPI Pin டைப் செய்த மறுகணம் பில் கட்டணம் செலுத்தப்பட்டுவிடும்.

PhonePe மூலம் மின் கட்டணம் செலுத்துவது எப்படி

போன்பே செயலிக்குள் சென்று ரீசார்ஜ் மற்றும் கட்டணங்கள் என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். 

அதில் எலக்ட்ரிக் பில் என்பதை தேர்ந்தெடுத்து 

பின்பு அதில் மாநிலத்தை தேர்வு செய்ய வேண்டும். 

அடுத்து அதில் உங்கள் மின் இணைப்பு எண்னை டைப் செய்யுங்கள் 

அடுத்து உங்கள் மின் தொகைக்கு ஓகே கொடுக்க வேண்டும். 

அதனை தொடர்ந்து UPI Pin டைப் செய்த மறுகணம் பில் கட்டணம் செலுத்தப்பட்டுவிடும்.

கூகுள் பே ஆப் மூலம் மின் கட்டணம் செலுத்துவது எப்படி

Bill Payments என்பதை தேர்வு செய்யுங்கள்

அதில் Electricity’ என்பதை தேர்ந்தெடுக்கவும்.

TamilNadu Electricity Board (TNEB) எனும் விருப்பத்தினை கிளிக் செய்ய வேண்டும்.

உங்கள் ‘Consumer Number’ எனப்படும் மின் இனைப்பு எண்ணை இணைக்க வேண்டும். அதோடு உங்கள் பெயரையும் உள்ளிட வேண்டும்.

கட்டணம் தொகை அதிலேயே காண்பிக்கப்பட்டும். Pay என்பதை கிளிக் செய்து UPI PIN ஐப் பயன்படுத்தி பில் செலுத்தலாம்.

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback